வறிய கிராமங்களை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டம்

வறிய கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு புதிய வேலைத்திட்டம்

by Staff Writer 16-02-2018 | 9:40 AM
COLOMBO (Newsfirst) - வறிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதன் கீழ் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை, ஹங்குரங்கெத்த பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள பல கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இந்தக் கிராமங்களில் வசிக்கும் 2200 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படவுள்ளதுடன் இதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலகங்கள் ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.