எத்தியோப்பிய பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்

எத்தியோப்பிய பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்தார்

by Staff Writer 16-02-2018 | 6:46 AM
COLOMBO (Newsfirst) - எத்தியோப்பிய பிரதமர் ஹயில்மரியம் டிசலின் (Hailemariam Desalegn) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் ஆபிரிக்காவின் முக்கிய நகரமொன்றில் கடந்த சில வருடங்களாக ஆளும் கட்சியின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் குழப்ப நிலை வலுப்பறெ்று வந்தது. இந்த குழப்ப நிலை போராட்டங்கள் என்பவற்றை தடுக்கும் நோக்கில் இவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை எத்தியோப்பிய தலைநகர் உட்பட சில முக்கிய நகரங்களில் எதிர்கட்சி தலைவர்கள் சிலரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில் இவர் இராஜினாமா செய்துள்ளார் நாட்டின் முக்கிய இனங்களான Oromo மற்றும்' Amharic இரண்டிற்கும் இடையில் தொடர் முறுகல் நிலை காணப்படுவதுடன் அரசியல் சக்திகளினால் தாம் ஒதுக்கப்படுவதாகவும் இவர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். இதனால் 6000 க்கும் அதிமான அரசியல் கைதிகள் எத்தியோப்பாவில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ஹயில்மரியம் தனியாக முடிவெடுக்காமல் சில தனிநபர்களின் கட்டுப்பாட்டிற்குள் செயற்பட நேரிட்டதே இவரது அரசியல் வீழ்ச்சிக்கு காரணம் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து வௌியிட்டுள்ளனரமை குறிப்பிடத்தக்கது.