புதுக்கடை நீதிமன்ற கட்டிடம் அருகில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு

புதுக்கடை நீதிமன்ற கட்டிடம் அருகில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு

புதுக்கடை நீதிமன்ற கட்டிடம் அருகில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Feb, 2018 | 6:44 pm

Colombo (Newsfirst)

கொழும்பு – வாழைத்தோட்டம், புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபரும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் , தாக்குதல் மேற்கொண்ட நபர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாரிடம் அந்நபரை மக்கள் ஒப்படைத்துள்ளனர்.

காயங்களுக்குள்ளான நிலையில், அந்நபர் பொலிஸாரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்