பிரியா வாரியருக்கு விதிக்கப்பட்ட தடை

பிரியா வாரியருக்கு விதிக்கப்பட்ட தடை

பிரியா வாரியருக்கு விதிக்கப்பட்ட தடை

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2018 | 9:24 am

‘ஒரு அடார் லவ்’ படத்தில் இருந்து வெளியான ‘மாணிக்க மலராய பூவி’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பிரியா வாரியருக்கு படத்தின் இயக்குநர் தடை விதித்துள்ளாராம்.

ஓமர் லூலூ இயக்கி வரும் மலையாள படம் ‘ஒரு அடார் லவ்’ இந்த படத்தின் மூலம் நாயகி ஆகி இருப்பவர் பிரியா வாரியர்.

இந்த படத்தின் ஒரு பாடல் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில் பிரியா வாரியர் கண்ஜாடை காட்டுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.

இதை பார்த்தவர்கள் அனைவருடைய மனதையும் கவர்ந்த பிரியா ஒரு சில நாட்களில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகி விட்டார்.

இதனால் படம் ரிலீஸ் ஆகும் முன்பே அவருக்கு போனிலும், இணைய தளங்களிலும் ஏகப்பட்ட பாராட்டுகள் வந்து குவிந்துள்ளன.

இந்த நிலையில், அவர் நடித்து வரும் படம் பற்றி ஒரு டி.வி.க்கு பேட்டி அளித்தார். இதை பார்த்த இயக்குனர் பிரியாவிடம், ‘ஒரு அடார் லவ்’ படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் வரை இனி யாருக்கும் பேட்டி கொடுக்கவே கூடாது” என்று தடை விதித்துள்ளார்.

படம் திரைக்கு வரும் முன்பு ஒரு கண் அசைவில் பரபரப்பு ஏற்படுத்திய பிரியா வாரியர் மீது, திரை உலக பிரபலங்களின் பார்வை விழுந்திருக்கிறது. எனவே, தமிழ் படங்களிலும் அவர் கால் பதிப்பார் என்று கூறப்படுகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்