நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி விசேட உரை

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி விசேட உரை

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி விசேட உரை

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2018 | 7:12 am

COLOMBO (Newsfirst) – நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இன்று காலை 8.30 க்கு ஜனாதிபதி செயலகத்தில், ஊடக நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்ததன் பின்னர், விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நிதி ஆணைக்குழுவின் தலைவர் உதித எச் பலிஹக்காரவினால் குறித்த அறிக்கை நேற்று மாலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்