அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர்  ஜாலிய விக்கிரமசூரியவிற்கு பிடியாணை

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவிற்கு பிடியாணை

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவிற்கு பிடியாணை

எழுத்தாளர் Bella Dalima

16 Feb, 2018 | 4:25 pm

Colombo (Newsfirst)

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவிற்கு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் வௌிநாட்டிற்கு சென்ற அவர் மீண்டும் நாடு திரும்பாததால் அவருக்கு இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, ஜாலிய விக்கிரமசூரியவிற்கு பிணை நின்ற அவரின் மனைவி மற்றும் மனைவியின் சகோதரிக்கும் கோட்டை நீதிமன்றத்தினால் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான ஜாலிய விக்ரமசூரிய மோசடி செய்ததாகக் கூறப்படும் 32,000 இலட்சம் அமெரிக்க டொலர் பணம் இலங்கையில் அவருடைய பெயரால் முன்னெடுக்கப்படும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய, ஜாலிய விக்ரமசூரியவின் பெயரால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அனைத்து கணக்குகளையும் சோதனையிடுவதற்கு அனுமதிக்குமாறு வங்கி முகாமைத்துவத்திற்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்