யால தேசியப் பூங்காவினால் 700.58 மில்லியன் வருமானம்

யால தேசியப் பூங்காவினால் 700.58 மில்லியன் ரூபா வருமானம்

by Bella Dalima 15-02-2018 | 4:42 PM
Colombo (Newsfirst)  2017 ஆம் ஆண்டில் யால தேசியப் பூங்கா அதிகளவான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுற்றாடல் அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் 700.58 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் 397,122 சுற்றுலாப் பயணிகள் யால தேசிய பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர்.