ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்கு தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்கு தீர்மானம்

by Staff Writer 15-02-2018 | 1:05 PM
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம், அரசாங்கம் என்ற வகையில் அனைவரும் இணைந்து செயற்படுவதற்கு இதன்போது இணக்கம் தெரிவித்ததாக கூறினார். இதற்கமைய அரசாங்கத்தை வலுப்படுத்தி முன்னோக்கி இட்டுச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் வழங்கிய செய்திக்கு செவிமடுத்து புதிய பயணத்தை மேற்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு தீர்மானித்ததாகவும் கபீர் ஹசீம் கூறினார். அரசாங்கம் மற்றும் கட்சியில் மறுசீரமைப்பை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மறுசீரமைப்பு நடவடிக்கையை காலம் தாழ்த்தாது மேற்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு ஏற்ற வகையில் இணைந்து செயற்படுவதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்ததாக கபீர் ஹசீம் கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கே பெரும்பான்மை உள்ளதாகவும் எவரேனும் பெரும்பான்மையை நிரூபித்தால் அது குறித்து தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=TxVhf6DNU7g  

ஏனைய செய்திகள்