இலங்கை, பங்களாதேஷிற்கு  இடையிலான 20 இற்கு 20 தொடர்

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பம்

by Staff Writer 15-02-2018 | 11:35 AM
COLOMBO (Newsfirst) - இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு20 தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இருபதுக்கு20 அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை தற்போது எட்டாமிடத்தில் இருக்கின்றது. இந்தப் பட்டியலில் பங்களாதேஷ் பத்தாமிடத்தில் உள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 7 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளன. அவற்றில் 5 போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டிள்ளதுடன் எஞ்சிய 2 போட்டிகளிலும் பங்களாதேஷ் வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில் இன்றைய போட்டி மிர்பூர் ஷெஹார் பங்ளா மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 4.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.