அரேபிய பாரம்பரிய உடையில் மில்லியன் டாலர் மணப்பெண்

அரேபிய பாரம்பரிய திருமண உடையில் அசத்திய ''மில்லியன் டாலர் மணப்பெண்''

by Bella Dalima 15-02-2018 | 4:20 PM
‘மில்லியன் டாலர் மணப்பெண்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட கேக் 'துபாய் மணமகள் 2018' விழாவில் கலந்துகொண்டு காண்போரைக் கவர்ந்துள்ளது. 120 கிலோ எடையில் மணப்பெண் போல் தயாரிக்கப்பட்ட இந்த கேக்கை உருவாக்கியவர் டெபி விங்ஹாம். இவர் மிகவும் செல்வாக்குப் பெற்ற கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னரும் இவர் 16 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஷு, 4.8 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைர ஆடை, 67 மில்லியன் டாலர் மதிப்புள்ள திருமண கேக் போன்றவற்றைத் தயாரித்து அசத்தியுள்ளார். இவரது சமீபத்திய படைப்பும் மிகவும் விலை குறைந்த படைப்பும் இந்த மணப்பெண் கேக்தான்! இந்த கேக் பெண்ணிற்கு அரேபிய பாரம்பரிய திருமண உடை அணிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 கிலோ சாக்லெட்டும் 50 கிலோ இனிப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறது.  
சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் நிஜமான மணப்பெண் போலவே தோற்றமளிக்கும். கற்பனையாக ஒரு விஷயத்தை உருவாக்குவதைவிட, நிஜத்தை என்னுடைய படைப்புகளில் பிரதிபலிப்பதையே விரும்புகிறேன். இந்த மணப்பெண் உடையில் 5 ஆயிரம் பூக்களும் 10 ஆயிரம் சாப்பிடக்கூடிய முத்துக்களும் பதிக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர, 5 வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வைரமும் 2 இலட்சம் டாலர் மதிப்புடையது
  என டெபி விங்ஹாம் கூறியுள்ளார்.