2050 ஆம் ஆண்டில் சூரியனின் வெப்பம் குறைந்து சிறு பனிக்கட்டிக் காலம் உருவாகலாம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

2050 ஆம் ஆண்டில் சூரியனின் வெப்பம் குறைந்து சிறு பனிக்கட்டிக் காலம் உருவாகலாம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

2050 ஆம் ஆண்டில் சூரியனின் வெப்பம் குறைந்து சிறு பனிக்கட்டிக் காலம் உருவாகலாம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

14 Feb, 2018 | 11:50 am

COLOMBO (Newsfirst) – அண்டவௌியில் உள்ள கோல்கள் நட்சத்திரங்கள் அனைத்திலும் விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடாத்தி வருகின்றனர் அந்த ஆய்வுகளின் முடிவில் பல அதிர்ச்சியான, வியத்தகு தகவல்களையும் ஆய்வாளர்கள் உலகிற்கு அறிவிக்கின்றனர்.

அந்த வகையில் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வொன்றில் அடுத்த 30 ஆண்டுகளில் சூரியனின் வெப்பம் குறைந்து அதன் வௌிச்சம் மங்கும் என்றும் இதன் காரணமாக சிறு பனிக்கட்டிக் காலம் (Mini Ice Age) உருவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சூரியனில் இருந்து வரும் வெப்பக் கதிர்வீச்சால் அதிகரித்துவரும் பூமியின் வெப்பநிலை காரணமாக துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

அதேபோல் புவி வெப்ப மயமாதல், பருவநிலை மாற்றம் போன்றவற்றால் பூமி அழிவை நோக்கி செல்வதாகவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர், கடந்த 2015, 2016, 2017 ஆகிய 3 ஆண்டுகள் தொடர்ந்து வெப்பம் அதிகம் பதிவான ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அடுத்த 30 ஆண்டுகளில் வெப்பம் கணிசமாக குறைந்துவிடும் என கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர், அதன்படி 2050 ஆம் ஆண்டுக்குள் சூரியனின் வெப்பநிலை குறைந்து அதன் வெளிச்சம் மங்கி காட்சியளிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியனின் 11 ஆண்டுகள் சுழற்சி முறையை கண்காணித்த விஞ்ஞானிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

11 ஆண்டு கால சுழற்சியில் சூரியன் நகர்கிறது என பொதுவாக அறியப்படுகிறது என்றும் அது இதய துடிப்பு போல, அதிகபட்ச சூரியக்கதிர் மற்றும் குறைந்தபட்ச சூரியக்கதிர் என கூறப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த காலக்கட்டம் சூரியனின் அமைதியான மற்றும் ஆக்ரோஷமான காலம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2050 ஆம் ஆண்டுக்குள் சூரியன் அசாதாரணமாக குளிர்ச்சியாகும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

17 ஆம் நூற்றாண்டில் இதுபோல் சூரியன் குளிர்ந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்று Maunder Minimum என்ற நிகழ்வின் போது சூரியனின் வெப்பநிலை குறைந்ததால் தேம்ஸ் நதி உறைந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இதுபோன்ற காலகட்டத்தில் தான் பால்டிக் கடல் உறைந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்து வருவது grand solar minimum என்றும் அப்போது கடந்த 11 ஆண்டுகளில் தோன்றிய குளிர்ச்சியான சூரியனை போன்று 7 சதவீத கூடுதல் குளிர்ச்சியுடன் சூரியன் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சூரியனின் வெப்பநிலை குறையும் போது அதன் முதல் விளைவு ஓசோன் படை மீது தான் இருக்கும் ஆனாலும் இந்த குளிர்ச்சி சீரானதாக இருக்காது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்