ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு: ஒரே தீர்வுக்கு வந்துள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

14 Feb, 2018 | 9:15 pm

Colombo (Newsfirst)

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் இன்று ஜனாதிபதியை சந்தித்து, எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த கலந்துரையாடலை அடுத்து, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்ததாவது,

அனைவரும் ஒரு இணக்கத்திற்கு வந்துள்ளோம். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதியுடன் ஒரே தீர்வுக்கு வந்துள்ளோம். அந்தத் தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகளை அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளவுள்ளோம். எமக்கு எவரேனும் சவால் விடுக்கின்றார்கள் எனின், அந்த சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவுள்ளோம்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்