அதிவேக வீதிகளில் புதிய வேகமானி கட்டமைப்பு

அதிவேக வீதிகளில் புதிய வேகமானி கட்டமைப்பு இன்று முதல் அமுல்

by Staff Writer 14-02-2018 | 7:18 AM
COLOMBO (Newsfirst) - அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது வேக வரையரையை மீறும் வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான புதிய மானி கட்டமைப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. வீதி விபத்துக்களில் 27 வீதமானவை அதிவேக வீதிகளில் இடம்பெறுவதாக அதிவேக வீதியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க குறிப்பிட்டார். இதன் காரணமாக கண்காணிப்பு மானி கட்டமைப்பை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டதாகவும் அவர் கூறினார். அதிவேக வீதியின் அனைத்து நுழைவாயில்களிலும் இந்த கட்டமைப்பு பொருத்தப்பட்டு இன்று முதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வேகக்கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களின் நிழற்படங்கள் உள்ளடக்கிய பற்றுச்சீட்டை அனைத்து வௌியேறும் வாயில்களில் வழங்கப்படும் என எஸ்.ஒபநாயக்க கூறினார். குறித்த கண்காணிப்பு பற்றுச்சீட்டில் வாகன இலக்கம், கண்காணிக்கப்பட்ட திகதி, நேரம் , வேகம் என்பன தொடர்பில் குறிப்பிடப்படிருக்கும் எனவும் அதிவேக வீதியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். https://www.youtube.com/watch?v=L0xTNlSL08U