வவுனியாவில் பெட்ரோலில் மண்ணெண்ணெய் கலந்து விநியோகம்: நிரப்பு நிலையம் யாருடையது?

வவுனியாவில் பெட்ரோலில் மண்ணெண்ணெய் கலந்து விநியோகம்: நிரப்பு நிலையம் யாருடையது?

வவுனியாவில் பெட்ரோலில் மண்ணெண்ணெய் கலந்து விநியோகம்: நிரப்பு நிலையம் யாருடையது?

எழுத்தாளர் Bella Dalima

14 Feb, 2018 | 7:54 pm

Colombo (Newsfirst)

வவுனியா – செட்டிக்குளம், ஆண்டியா புளியங்குளம் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலுடன் மண்ணெண்ணெய் கலந்து விநியோகித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பெட்ரோலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்கப்படுவதாக 119 க்கு ஒருவர் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பொறியியல் பிரிவு அதிகாரிகளால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அங்கிருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே பெட்ரோலில் கலப்படம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்