அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை

அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை

அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை

எழுத்தாளர் Staff Writer

14 Feb, 2018 | 12:59 pm

COLOMBO (Newsfirst) – சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த விடயம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்துடன் சிவா 4 ஆவது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடியாக யார் என்பது குறித்து குழப்பம் நீடித்த நிலையில், அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்பின் டி.இமான் ‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். இவருடைய இசையில் அஜித் தன்னுடைய சொந்த குரலில் ஒரு பாடல் பாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த தகவல் உண்மை இல்லை, அஜித் பாடல் எதுவும் பாட மாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விடயம் இப்படத்தில் இல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்