IRONMAN 70.3 சர்வதேசப் போட்டி இலங்கையில்

IRONMAN 70.3 சர்வதேசப் போட்டியை தெற்காசியாவில் நடத்தும் முதல் நாடாக இலங்கை பதிவு

by Bella Dalima 13-02-2018 | 9:41 PM
Colombo (Newsfirst) IRONMAN 70.3 சர்வதேசப் போட்டியை தெற்காசியாவில் நடத்தும் முதல் நாடாக இலங்கை பதிவாகவுள்ளது. இந்தப் போட்டிக்கு MTV/MBC மற்றும் நியூஸ்ஃபெஸ்ட் உத்தியோகப்பூர்வ ஊடக அனுசரணையாளராக செயற்படவுள்ளன. வௌிநாடுகளில் பிரசித்தி பெற்ற IRONMAN 70.3 போட்டி மூன்று அம்சங்களைக் கொண்டதாகும். நீச்சல், சைக்கிளோட்டம், மரதன் ஆகிய மூன்று விளையாட்டுகள் இந்தப் போட்டியில் உள்ளடங்கியுள்ளன. போட்டியில் பங்குபற்றும் வெவ்வேறு வயதுப் பிரிவினரின், வெவ்வேறான உடற்தகுதி மற்றும் எதிர்பாராத சம்பவங்களை எதிர்நோக்கியவர்களின் பலத்தை பரிசீலித்துப் பார்ப்பதே இந்தப் போட்டியின் இலக்காகும். வாழ்க்கையை வெற்றிகொள்ள எதிர்பார்க்கும் போட்டியாளர்களின் இலட்சியத்தை ஈடேற்ற வழி சமைப்பதே IRONMAN 70.3 போட்டியின் பிரதான நோக்கமாகும். IRONMAN 70.3 போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. 63 நாடுகளைச் சேர்ந்த 850 க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். https://www.youtube.com/watch?v=BgQrpGDk0BM