ஐ.தே.க வுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்து பொய்யானது: தமிழ் தேசியக் கூட்டமைப்பு

எழுத்தாளர் Bella Dalima

13 Feb, 2018 | 7:00 pm

Colombo (Newsfirst)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்து பொய்யானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பில் இதுவரையில் எவ்வித கோரிக்கைகளும் தங்களுக்கு முன்வைக்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கட்சி ஆட்சியை அமைத்த பின்னர், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானங்களை மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்