இலங்கை தேயிலை உயர்தரத்தைக்கொண்டுள்ளது: ஆய்வுக்குழு

இலங்கை தேயிலை உயர்தரத்தைக் கொண்டிருப்பதாக ரஷ்ய ஆய்வுக்குழு அதிகாரிகள் தெரிவிப்பு

by Bella Dalima 13-02-2018 | 5:07 PM
Colombo (Newsfirst) இலங்கை தேயிலை உயர்தரத்தைக் கொண்டிருப்பதாக ரஷ்யாவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த தேயிலை தொடர்பான ஆய்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 4ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்த அதிகாரிகளை விவசாய பணிப்பாளர் நாயகம், இலங்கையிலிருந்து சிறந்த தேயிலையை ஏற்றுமதி செய்யும் நிறுவன அதிகாரிகள் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தேயிலை தொடர்பில் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் இந்த ஆய்வுகளின் மூலம் நீங்கியிருப்பதாக தேயிலை ஆணையாளர் ஜயந்த தெரிவித்துள்ளார். இலங்கை தேயிலை தொடர்பாக ரஷ்ய ஆய்வுக்குழு அதிகாரிகள் ரஷ்ய அரசாங்கத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.