யார் இந்த பிரியா பிரகாஷ் வாரியர்: சமூக ஊடகங்களில் வைரலானது எவ்வாறு?

யார் இந்த பிரியா பிரகாஷ் வாரியர்: சமூக ஊடகங்களில் வைரலானது எவ்வாறு?

யார் இந்த பிரியா பிரகாஷ் வாரியர்: சமூக ஊடகங்களில் வைரலானது எவ்வாறு?

எழுத்தாளர் Bella Dalima

13 Feb, 2018 | 4:32 pm

பிரேமம் சாய் பல்லவி, ஜிமிக்கி கம்மல் ஷெரில் வரிசையில் இணைந்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

ஒமர் லூலு இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’.

ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

கடந்த வாரம் யூடியூப் தளத்தில் ‘மாணிக்க மலராய பூவி’ என்ற பாடல் பதிவேற்றப்பட்டது. சில நிமிடங்களிலேயே பாடல் வைரலானது.

பாடல் பிரபலமானதற்கு முக்கிய காரணம் படத்தின் நாயகி பிரியா பிரகாஷ் வாரியரும் அவர் கண்களால் செய்யும் மாயாஜால ரொமான்ஸூம் தான்.

இந்தப் பாடல் வைரலானதால், பிரியா பிரகாஷின்து இன்ஸ்டாகிராம் கணக்கில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது B.Com முதலாமாண்டு படித்து வருகிறார். அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் படம்தான் ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம்.

 

????

Posted by Priya Varrier on Saturday, February 10, 2018


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்