தேர்தலூடாக தெரிவானவர்களின் பெயர்ப்பட்டியல் 2 வாரங்களுக்குள் வௌியிடப்படும்

தேர்தலூடாக தெரிவானவர்களின் பெயர்ப்பட்டியல் 2 வாரங்களுக்குள் வௌியிடப்படும்

தேர்தலூடாக தெரிவானவர்களின் பெயர்ப்பட்டியல் 2 வாரங்களுக்குள் வௌியிடப்படும்

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2018 | 7:47 am

COLOMBO (Newsfirst) – நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்வாகியுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவத்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் தேர்தலுடன் தொடர்புடைய ஆவணங்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளூடாக கொழும்பிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்த 340 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான அங்கத்துவப் பட்டியலின் பெயர் விபரங்கள் கட்சியின் செயலாளர்கள் ஊடாக பெற்றுக் கொண்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்காக தனியாக வர்த்தமானி பிரசுரிக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்