by Staff Writer 12-02-2018 | 5:59 PM
உள்ளூரட்சி மன்றத் தேர்தலின் பின்னர் தமக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வௌியிடப்பட்ட போது தாம் அதனை முற்றாக மறுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக வௌியான தகவல்களை ஜனாதிபதி மறுத்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைத்தல் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் எந்தவெரு தீர்மானமோ முடிவோ எடுக்கப்படவில்லையென ஜனாதிபதி வௌியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.