விரைவில் பொதுத் தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தல்

விரைவில் பொதுத் தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தல்

விரைவில் பொதுத் தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2018 | 4:15 pm

COLOMBO (Newsfirst) – நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனைத்து நிலைமைகளையும் மாற்றுவதற்கு,பொதுத் தேர்தல் ஒன்றுக்கு சென்று உறுதியான அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவத்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இதன் போது பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டிருந்தார்.

”நாம் அமோக வெற்றி பெற்றுள்ளோம். எமக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நாம் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மக்கள் தௌிவான ஒரு தீர்மானத்தை வழங்கியுள்ளனர். மிக விரைவில் பொது தேர்தலை நடத்தி மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு நாம் கேட்டு கொள்கிறோம்.”

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்