நாமல் ராஜபக்ஸ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

நாமல் ராஜபக்ஸ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

நாமல் ராஜபக்ஸ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2018 | 7:44 pm

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வெளிநாடு செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

இம்மாதம் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் மே மாதம் 18 ம் திகதி வரை வெளிநாட்டில் தங்கியிருப்பதற்கு அனுமதி கோரி அவர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஸவின் கடவுச்சீட்டை தற்காலிக அடிப்படையில் வழங்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத் தொடர் மற்றும் இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக நாமல் ராஜபக்ஸ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கால்பந்து விளையாட்டினை ஊக்குவிப்பதற்காக KRISH LANKA எனப்படும் இந்திய நிறுவனம் வழங்கிய 70 மில்லியன் ரூபாவை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு தொடரப்பட்டுள்ள வழக்கில் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஸ நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்