by Bella Dalima 11-02-2018 | 10:04 PM
Colombo (Newsfirst)
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபையைத் தவிர்ந்த ஏனைய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தனித்தும் கூட்டணியாகவும் ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பம் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்குக் கிடைத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு ஆதரவு வழங்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வந்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்னாயக்க ஆகியோருக்கு இடையில் ஹட்டனில் இது தொடர்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.