விரைவில் திருமணம் செய்துகொள்வேன் – அனுஷ்கா

விரைவில் திருமணம் செய்துகொள்வேன் – அனுஷ்கா

விரைவில் திருமணம் செய்துகொள்வேன் – அனுஷ்கா

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2018 | 4:58 pm

நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபாசுடன் காதல் என அனுஷ்கா பற்றிய கிசு கிசு இன்னும் முடியவில்லை. ஆனாலும், பிரபாசுடன் தனக்கு காதல் இல்லை என அனுஷ்கா தொடர்ந்தும் கூறி வருகிறார்.

இந்நிலையில், பாகமதி படத்தின் வெற்றி விழா நிகழ்வில் கலந்துகொண்ட அனுஷ்கா, தனது திருமணம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.

எனது திருமணத்தை நான் தள்ளிப்போடவில்லை. எனக்கு குழந்தைகள் பிடிக்கும். எனவே, விரைவில் திருமணம் செய்துகொள்வேன். அதற்காக உடனடியாக திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதாக அர்த்தம் இல்லை. திருமணம் பற்றி முடிவு எடுத்ததும் அதைப் பற்றி முறையாக அறிவிப்பேன்

என கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்