ஹாங்காங்கில் விபத்து: 19 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் இரட்டை அடுக்கு பேருந்து விபத்திற்குள்ளானதில் 19 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 10-02-2018 | 10:06 PM
ஹாங்காங்கின் தை போ நகரில் இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 17 பேர் ஆண்கள் எனவும் 2 பேர் பெண்கள் எனவும் தகவல் வௌியாகியுள்ளது. மேலும், இந்த விபத்தில் 50 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 19 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹாங்காங்கில் இதுபோன்ற பேருந்து விபத்துக்கள் மிக அரிதாகவே இடம்பெறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.