தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

by Staff Writer 10-02-2018 | 8:57 AM
COLOMBO (Newsfirst) - உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைகேடு தொடர்பிலான முறைப்பாடுகள் இன்று காலை 6 மணி முதல் ஏற்றுக்கொள்ளப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில், முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் முறைகேடுகளை பதிவு செய்வதற்கு

0112 86 64 92

என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு

0112 86 64 70

என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், மத்திய மாகாணத்தில் இடம்பெறும் மோசடிகள் குறித்து

0112 86 64 78

என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அழைப்பினை ஏற்படுத்தி முறைபாடுகளை பதிவு செய்ய முடியும் மேல் மாகாணத்தில்

0112 86 64 48

எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். இதனைத் தவிர, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டுப் பிரிவுடன் தொடர்புடைய பொலிஸ் பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவிற்கான தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம்

112 86 65 41

மற்றும்

0112 86 65 46

ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி, தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.