பாரிஸின் ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

அதிக பனிப்பொழிவு காரணமாக பாரிஸின் ஈஃபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

by Bella Dalima 10-02-2018 | 4:28 PM
பாரிஸ் நகரின் அடையாளமாகத் திகழும் ஈஃபிள் கோபுரம் (Eiffel Tower), பனிப்பொழிவு காரணமாக கடந்த 6 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது. நாளை (11) வரை மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அதிசயங்களுள் ஒன்றான ஈஃபிள் கோபுரம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ளது. இதனைப் பார்வையிட ஆண்டுதோறும் சுமார் 60 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில், பாரிஸ் நகரின் அடையாளமாகத் திகழும் ஈஃபிள் கோபுரம் கடந்த 6 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது. பாரிஸ் நகரில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 1887 ஆம் ஆண்டில் இருந்து எப்போதும் இல்லாத அளவிற்கு 12 சென்டிமீட்டர் உயரத்திற்கு பனி கொட்டிக்காணப்படுகிறது. ஈஃபிள் கோபுரத்தைப் பார்வையிட வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் வழுக்கி வீழும் அபாயம் காணப்படுவதால், அதனைத் தற்காலிகமாக மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.