பேரறிவாளன் உள்ளிட்ட 7 ​பேரையும் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 ​பேரையும் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 ​பேரையும் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2018 | 3:35 pm

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 ​பேரையும் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் செய்யாமல் 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது பா.ம.க-வின் நிலைப்பாடென ராமதாஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை விடுதலை செய்வதன் மூலம் அவர்கள் சமூகத்திற்காக உழைக்கவும் கடந்த 27 ஆண்டுகளாக நிறைவேற்றத் தவறிய குடும்பக் கடமைகளை நிறைவேற்றவும் வாய்ப்புக் கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை விடுதலை செய்யலாம் என சிறைத்துறையினர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்