தம்புளையில் வர்த்தக நிலையம் முன் சடலம் மீட்பு

தம்புளையில் வர்த்தக நிலையம் முன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்பு

by Bella Dalima 09-02-2018 | 4:15 PM
கொழும்பு (நியூஸ்ஃபெஸ்ட்) தம்புளை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (09) அதிகாலை பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.