உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: நீளமான வாக்குச்சீட்டு மட்டக்களப்பிலும் குறுகிய வாக்குச்சீட்டு பாணந்துறையிலும் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2018 | 8:16 pm

நியூஸ்ஃபெஸ்ட் (கொழும்பு)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மிகவும் நீளமான வாக்குச்சீட்டு மட்டக்களப்பிலும் குறுகிய வாக்குச்சீட்டு பாணந்துறையிலும் பதிவாகியுள்ளது.

இதன் பிரகாரம், 33 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள மட்டக்களப்பு மாநகர சபைக்கு 11 அரசியல் கட்சிகளும் 5 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

மூதூர் பிரதேச சபைக்காக 14 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ள நிலையில், மொத்தமாக 21 பேர் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாணந்துறை நகர சபைக்கு 16 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதற்காக 5 அரசியல் கட்சிகளும் 3 சுயேட்ச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்