இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் கோழிகளுக்கு சவுதி அரேபியா தற்காலிகத் தடை விதித்துள்ளது

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் கோழிகளுக்கு சவுதி அரேபியா தற்காலிகத் தடை விதித்துள்ளது

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் கோழிகளுக்கு சவுதி அரேபியா தற்காலிகத் தடை விதித்துள்ளது

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2018 | 7:19 pm

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகள் சவுதி அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகாவின் தசரகள்ளி கிராமத்தில் கோழிகளிடையே பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பது உலக கால்நடை சுகாதார அமைப்பினால் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அந்நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்தியாவில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.

சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பால் இந்தியாவின் கோழி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்