அவன்ற் கார்ட் நிறுவனத் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அவன்ற் கார்ட் நிறுவனத் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அவன்ற் கார்ட் நிறுவனத் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2018 | 6:41 pm

நியூஸ்ஃபெஸ்ட் (கொழும்பு)

அவன்ற் கார்ட் நிறுவனத் தலைவர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த இலஞ்ச ஊழல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

355 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியமை மற்றும் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட அவன்ற் கார்ட் மெரிடைம் சர்விசஸ் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஷங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

முறைப்பாட்டாளர்கள், பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்க வேண்டிய சாட்சியங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து, தீர்ப்பு வழங்குவதற்காக எதிர்வரும் 14 ஆம் திகதி இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்