அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவிற்கு பிணை வழங்க சட்ட மா அதிபர் திணைக்களம் கடும் ஆட்சேபனை

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவிற்கு பிணை வழங்க சட்ட மா அதிபர் திணைக்களம் கடும் ஆட்சேபனை

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவிற்கு பிணை வழங்க சட்ட மா அதிபர் திணைக்களம் கடும் ஆட்சேபனை

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2018 | 3:48 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேனவிற்கு பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவிப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, பிணை மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முன்னெடுப்பதற்கான உத்தரவை கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன பிறப்பித்தார்.

குற்றவியல் நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தி, நம்பிக்கையை சீர்குலைத்தமை, பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முறையற்ற பயன்பாடு, குற்றத்தை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை மற்றும் ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்கள் சந்தேகநபர்களுக்கு எதிராக
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்