பந்து வீச்சில் இலங்கை ஆதிக்கம்

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பந்து வீச்சில் இலங்கை ஆதிக்கம்

by Bella Dalima 08-02-2018 | 6:32 PM
பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ், இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் இந்தப் போட்டியில் தமீம் இக்பாலின் விக்கெட்டைக் கைப்பற்றிய போது, டெஸ்ட் அரங்கில் 100 விக்கெட் மைல் கல்லை எட்டினார். இலங்கை அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் மைல் கல்லை எட்டிய 7 ஆவது பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். டாக்காவில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது. குசல் மென்டிஸ் 68 ஓட்டங்களையும் ரொஷேன் சில்வா 56 ஓட்டங்களையும் பெற்றனர். 4 வருடங்களுக்கு பின்னர் பங்களாதேஷ் அணியில் இடம்பெற்ற அப்துர் ரஷாக் 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், தய்ஜூல் இஸ்லாம் 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.