தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் பலி

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் பலி, பலரைக் காணவில்லை

by Bella Dalima 08-02-2018 | 4:03 PM
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தைவான் நாட்டின் துறைமுக நகரமான ஹுவாலியனில் நேற்று முன்தினம் (06) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகாகப் பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக பாரிய அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்தது. அதனுள் ஏராளமானோர் சிக்கியிருந்தனர். ஏனைய பகுதிகளிலும் வீடுகள், பாலங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், சாலைகளிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. நேற்று இரவு வரை 7 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இன்று அதிகாலை நடந்த மீட்புப் பணியின்போது மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உயிரிழப்பு 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரைக் காணவில்லை.