இலங்கையில் முதன்முறையாக தைராக்சின் சத்திரசிகிச்சை

இலங்கையில் முதன்முறையாக வாய் வழியாக கெமராவை செலுத்தி தைராக்சின் சத்திரசிகிச்சை 

by Bella Dalima 08-02-2018 | 7:41 PM
கொழும்பு (நியூஸ்ஃபெஸ்ட்) இலங்கையில் முதன்முறையாக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் இன்று தைராக்சின் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் மொஹமட் ரிஸ்வி தலைமையிலான குழுவினரால் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணுக்கு தைராக்சின் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் தொண்டை வழியாக துவாரமிட்டு, அதற்குள் கெமராவை செலுத்தி இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும், வாய் வழியாக கெமராவை செலுத்தி அதன் மூலம் தைராக்சின் சத்திரசிகிச்சை இலங்கையில் முதன்முறையாக இன்று மேற்கொள்ளப்பட்டதாக டொக்டர் மொஹமட் ரிஸ்வி தெரிவித்தார். இந்த முறைமை மூலம் சத்திரசிகிச்சை மேற்கொண்டால் தழும்புகள் ஏற்படாது என டொக்டர் மொஹமட் ரிஸ்வி சுட்டிக்காட்டினார்.