அமோனியா பயன்படுத்தி மதுபானம் உற்பத்தி செய்த இருவர் கைது

அமோனியா பயன்படுத்தி மதுபானம் உற்பத்தி செய்த இருவர் கைது

அமோனியா பயன்படுத்தி மதுபானம் உற்பத்தி செய்த இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Feb, 2018 | 1:34 pm

COLOMBO (Newsfirst) – அமோனியா பயன்படுத்தி மதுபானம் உற்பத்தி செய்த இருவர் சிலாபம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில பகுதியில் வீடொன்றினுள் இந்த உற்பத்தி இடம்பெற்று வந்துள்ளது.

முல்லைத்தீவு மற்றும் வென்னப்புவ பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள சட்டவிரோத அமோனியா மதுபான உற்பத்தி கண்டி மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்