மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக முறைப்பாடு

மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

by Bella Dalima 07-02-2018 | 10:43 PM
கொழும்பு (நியூஸ்ஃபெஸ்ட்) அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக கோட்டை முன்னாள் நகர சபைத் தலைவர் ஜனக்க ரணவக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். மலிக் சமரவிக்ரம சட்டவிரோதமாகக் காணியைப் பயன்படுத்தியமையால் அரச நிறுவனம் ஒன்றுக்கு நட்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்து ஜனக்க ரணவக்க இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.