உதயங்க வீரதுங்க கைது: விசேட குழு டுபாய் பயணம்

உதயங்க வீரதுங்க கைது: சட்ட நடவடிக்கைகளுக்காக விசேட குழு டுபாய் பயணம்

by Staff Writer 07-02-2018 | 7:37 AM
COLOMBO (Newsfirst) - கைது செய்யப்பட்டுள்ள உதயங்கவீரதுங்க தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக ஏழு பேர் அடங்கிய குழுவொன்று டுபாய்க்கு செல்லவுள்ளது. குறித்த குழு இன்று நாட்டிலிருந்து புறப்பட்டு செல்வுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரிகள், குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினர், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், வௌிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் குறித்த குழுவில் அடங்கியுள்ளனர். இந்த விடயம் இரு அரசுகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இராஜதந்திர செயற்பாடு என்பதால் அந்நாட்டு அதிகாரிகளுடன் டுபாய் நோக்கி செல்லும் இலங்கை அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கடந்த நான்காம் திகதி டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.  

ஏனைய செய்திகள்