English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
07 Feb, 2018 | 5:48 pm
கொழும்பு (நியூஸ்ஃபெஸ்ட்)
வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலணி தொடர்பில் விசேட கணக்காய்வு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்தது.
அதற்கமைய, வௌிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்துதல் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்தார்.
துபாய், அபுதாபி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு கணக்காய்வு அதிகாரிகளை அனுப்பவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டார்.
குறித்த கணக்காய்வு அதிகாரிகள் வௌிநாட்டில் வேலை செய்யும் இலங்கை தொழிலாளர்களிடம் பல்வேறு விடயங்கள் குறித்து தகவல்களைப் பெறவுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் மேலும் கூறினார்.
அதேவேளை, குறித்த நாடுகளின் தூதுவராலயங்கள் மற்றும் முகவர் நிலையங்களிடமிருந்தும் தகவல்கள் திரட்டப்படவுள்ளன.
பெறப்படும் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி அறிக்கை ஒன்றைத் தயாரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க சுட்டிக்காட்டினார்.
22 Jun, 2022 | 05:39 PM
24 Jan, 2020 | 03:48 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS