முள்ளியவளை பகுதியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

முள்ளியவளை பகுதியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

முள்ளியவளை பகுதியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Feb, 2018 | 9:56 am

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று மீண்டும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன

போர் நடைபெற்ற காலப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளால் தங்கம், வெடிப் பொருட்கள், ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதியிலேயே இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றது.

முல்லைத்தீவு நீதவான் லெனின் குமார் முன்னிலையில் இந்த பணிகள் இடம்பெற்றன. எனினும் எவ்வித பொருட்களும் இந்த அகழ்வின் போது கண்டு பிடிக்கப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்