தேர்தல் பிரசாரங்களுக்கு பொலித்தீன் பயன்படுத்திய 100 வேட்பாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்

தேர்தல் பிரசாரங்களுக்கு பொலித்தீன் பயன்படுத்திய 100 வேட்பாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்

தேர்தல் பிரசாரங்களுக்கு பொலித்தீன் பயன்படுத்திய 100 வேட்பாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2018 | 5:02 pm

கொழும்பு (நியூஸ்ஃபெஸ்ட்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களுக்காக பொலித்தீனைப் பயன்படுத்திய 100 வேட்பாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்தது.

இந்த விடயம் தொடர்பில் கட்சி செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பதில் பணிப்பாளர் உபாலி இந்திரரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் பொலித்தீன் பயன்படுத்திய 50 வேட்பாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை மீறி செயற்படும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரித்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்