சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கு அணித்தலைவராக தினேஷ் சந்திமால் நியமனம்

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கு அணித்தலைவராக தினேஷ் சந்திமால் நியமனம்

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கு அணித்தலைவராக தினேஷ் சந்திமால் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2018 | 7:24 pm

கொழும்பு (நியூஸ்ஃபெஸ்ட்)

பங்களாதேஷூக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான அணித்தலைவர் பொறுப்பு தினேஷ் சந்திமாலிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உபாதைக்குள்ளான அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் பங்களாதேஷூக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 தொடரிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இதன் காரணமாக இலங்கை அணியை வழிநடத்தும் வாய்ப்பை தினேஷ் சந்திமாலுக்கு வழங்கியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று அறிவித்தது.

இசுரு உதான, ஜெஃப்ரி வென்டர்சே, அமில அபொன்சு, ஷெஹான் மதுஷங்க, ஜீவன் மென்டிஸ், அசித பெர்னாண்டோ ஆகியோரும் இலங்கை சர்வதேச இருபதுக்கு 20 குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

15 பேர் கொண்ட இந்த குழாத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்