இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயற்சித்த இருவர் கைது

இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயற்சித்த இருவர் கைது

இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயற்சித்த இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Feb, 2018 | 1:19 pm

நாட்டிலிருந்து இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயற்சித்த இருவர் யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிங்கு படகொன்றுடன் நேற்று மாலை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்களிடமிருந்து 3.7 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

100 கிராம் நிறையுடைய 37 தங்க பிஸ்கட்டுக்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

இவற்றை இந்தியாவிற்கு கடத்த முயற்சித்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர்களை சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையின் பேச்சாளர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்