பருத்தித்துறை - பொன்னாலை வீதி மக்கள் பாவனைக்கு

பருத்தித்துறை - பொன்னாலை வீதி இன்று மக்கள் பாவனைக்காக திறப்பு

by Staff Writer 06-02-2018 | 2:07 PM
யாழ். பருத்தித்துறை - பொன்னாலை வீதி இன்று காலை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டிலிருந்து மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை - பருத்தித்துறை வீதியை திறப்பதற்கு ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டார். இதனையடுத்து குறித்த வீதி திறக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 55 கிலோமீற்றர் நீளமான இந்த வீதியின் 2.75 கிலோமீற்றர், உயர் பாதுகாப்பு​ வலயத்திற்குள் உள்ளடங்கியிருந்தது. இந்த வீதி திறக்கப்படுவதன் மூலமாக சுமார் 50 கிலோமீற்றர் பயணத்தூரம் குறைவடையவுள்ளது. திறப்பு நிகழ்வில் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி மற்றும் யாழ். அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். பல வருடங்களுக்கு பிறகு இன்று இவ்வீதியூடாக பஸ் ஒன்றும் பயணித்ததுடன் முதலாவது பயணச்சீட்டை அரசாங்க அதிபர் மற்றும் யாழ். கட்டளை தளபதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்