மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தலைமை நீதிபதி கைது

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தலைமை நீதிபதி கைது

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தலைமை நீதிபதி கைது

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2018 | 6:39 am

COLOMBO (Newsfirst) – மாலைதீவில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மவுமூன் அப்துல் கயூம் மற்றும் தலைமை நீதிபதி அப்துல்லா சயீட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளர்.

அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மாலைதீவு அரசாங்கம் 15 நாட்கள் அவசர நிலையை பிரகடனம் செய்திருந்தது.

சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்களை விடுவிக்குமாறு அண்மையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த ஜனாபதி யாமீன் பதவி விலக வேண்டும் என மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்

இந்நிலையிலேயே அங்கு அவசர கால நிலைமை நேற்று பிரகடனப்படுத்தப்பட்டதுடன். எதிர்கட்சி உறுப்பினர்களை கைது செய்யும் வகையில் இராணுவம் செயற்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி மவுமூன் அப்துல் கயூமின் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மவுமூன் அப்துல் கயூம், தற்போதைய ஜனாதிபதியின் சகோததர் என்பதுடன் 1978 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகளாக மாலைதீவின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று அதிகாலை தலைமை நீதிபதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்