ஐ.தே.க-வின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஏ.எல். மொஹமட் நசீர் பதவிப்பிரமாணம்

ஐ.தே.க-வின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஏ.எல். மொஹமட் நசீர் பதவிப்பிரமாணம்

ஐ.தே.க-வின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஏ.எல். மொஹமட் நசீர் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

06 Feb, 2018 | 9:55 pm

கொழும்பு (நியூஸ்பெஸ்ட்)

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏ.எல். மொஹமட் நசீர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலின் மூலம் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.எச்.எம். சல்மான் அண்மையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

சுழற்சி முறையிலான தேசியப் பட்டியலுக்கு அமைய, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். மொஹமட் நஸீர் இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலில் சந்தர்ப்பம் வழங்குவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரமே இந்தப் பதவி ஏ.எல். மொஹமட் நசீருக்கு வழங்கப்பட்டதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்