ஊழல் மற்றும் மோசடி நிலைமை தொடர்பில் மலிக் சமரவிக்ரம அறிக்கை

ஊழல் மற்றும் மோசடி நிலைமை தொடர்பில் மலிக் சமரவிக்ரம அறிக்கை

ஊழல் மற்றும் மோசடி நிலைமை தொடர்பில் மலிக் சமரவிக்ரம அறிக்கை

எழுத்தாளர் Bella Dalima

06 Feb, 2018 | 7:51 pm

கொழும்பு (நியூஸ்பெஸ்ட்)

நாட்டில் ஏற்பட்டுள்ள ஊழல் மற்றும் மோசடி நிலைமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

பொது நிறுவனங்களில் இருந்து நன்மை பெறும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க தேசிய அரசாங்கத்தின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஷ் நிறுவனத்தின் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பாலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டமை இந்த செயற்பாடுகளின் ஒரு அங்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த அரசாங்கத்தில் மக்களின் பணத்தைத் திருடியவர்களுக்கு எதிராக தங்களின் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மலிக் சமரவிக்ரம தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்