அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 9 ஆம் திகதி விடுமுறை: கல்வி அமைச்சு 

அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 9 ஆம் திகதி விடுமுறை: கல்வி அமைச்சு 

அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 9 ஆம் திகதி விடுமுறை: கல்வி அமைச்சு 

எழுத்தாளர் Bella Dalima

06 Feb, 2018 | 10:29 pm

கொழும்பு (நியூஸ்பெஸ்ட்) – உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 9 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர, வாக்குப்பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகிக்கும் மற்றும் பொறுப்பேற்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும் 2 கல்வியற்கல்லூரிகளும் எதிர்வரும் 7 ஆம், 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்படவுள்ள பாடசாலைகள் மற்றும் கல்வியற்கல்லூரிகள் இம்மாதம் 12 ஆம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்